ஊரடங்கு விடுமுறையில் நாற்று நடும் தமிழ் நடிகை

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு விடுமுறையால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் பிரபல நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து தங்களது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். ஒருசிலர் பொழுதுபோக்கு வீடியோக்களையும் ஒருசிலர் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் நடிகையும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். கடந்த சில நாட்களுக்கு முன் கீர்த்தி பாண்டியன் தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரால் உழுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது தெரிந்ததே. தற்போது உழுத நிலத்தில் நாற்று நடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகை கீர்த்தி பாண்டியன் வயலில் இறங்கி, நாற்று நடும் பெண்களுடன் இணைந்து நாற்று நடும் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் தான் நாற்று நடுவதாகவும், இது பொது இடம் கிடையாது என்றும், அதனால் தான் ஊரடங்கை மீறவில்லை என்றும் கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாகர்கோயில் காசியால் ஏமாந்த நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள் யார்? தீவிர விசாரணை

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி பெண்களை ஏமாற்றிய கயவர்களின் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு குற்றம் நாகர்கோயிலும் நடந்துள்ளது.

எகிரும் தங்கத்தின் விலை!!! இந்நேரத்தில் தங்கத்தின் முதலீடு நல்லதா???

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அவர்களுடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லையே: ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்

சமீபத்தில் பாலிவுட் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்களான இர்பான்கான் மற்றும் ரிஷிகபூர் ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சியில் நேற்று வரை 15 பேர், இன்று ஒரே நாளில் 74 பேர்: கோயம்பேடு காரணமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வரை 15 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு அடைந்து இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் இம்மாவட்டத்தில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

ஊரடங்கு முடியும் வரை மின் கட்டணம் வசூலிக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் மின்சார கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது