'இப்படி பண்ணலாமா, நவம்பர் விரதம் கலைஞ்சிடுமே? கீர்த்தி பாண்டியன் கிளாமர் லுக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு இப்படி பண்ணலாமா, நவம்பர் விரதம் கலைஞ்சிடுமே? போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடித்த கீர்த்தி பாண்டியன் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது சிங்கப்பூர் சுற்றுலா சென்று இருக்கும் கீர்த்தி பாண்டியன் அங்கிருந்தபடியே செம கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் செல்லும் போது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் இந்த முறை மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகியுள்ளது. அதில் 'இப்படி பண்ணலாமா, நவம்பர் விரதம் கலைஞ்சிடுமே? என்ற கமெண்ட்டும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் ’கொஞ்சம் பேசினால் என்ன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வினோத் கிஷான் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹரி தஃபூசியா என்பவர் இசையமைக்கின்றார். இந்த படத்தை கிரி முர்ஃபி இயக்கயுள்ளார். இந்த படத்தின் கதை, பள்ளிக்கால தோழர்கள் இருவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்திக்கும் போது ஏற்படும் காதல் என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியாக வித்தியாசமான செம லவ் ஸ்டோரி ஆக இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும், இந்த படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments