பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஜோக் சொன்ன 'அன்பிற்கினியாள்'!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘அன்பிற்கினியாள்’ படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அதில் ஜோக் ஒன்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வார் என்பதும் அந்த புகைப்படங்கள் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் சற்று முன்னர் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு பிகினி புகைப்படங்களை பதிவு செய்து அதில் ஒரு ஜோக்கும் பதிவு செய்துள்ளார். அதில் ’கீர்த்தி பாண்டியன் ஒருவேளை கடலுக்குள் விழுந்து விட்டார் என்றால் அவருக்கு எந்த ஆபத்தும் நடக்காது, ஏனென்றால் அவர் தான் குச்சி ஆயிற்றேன் என சிறு வயதில் தன்னுடைய தோழிகள் தான் ஒல்லியாக இருப்பதை கிண்டல் செய்வார்கள் என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout