சின்னப்பையனைத்தான் திருமணம் செய்வேன்: 35 வயது ஜெயம் ரவி பட நடிகை அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னைவிட வயது குறைவான சின்ன பையனை தான் திருமணம் செய்வேன் என ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்த நடிகை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம். அந்த படத்தில் அவர் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்து இருப்பார் என்பதும் முதல் படத்திலேயே கிளாமரில் கலக்கி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது
‘கோமாளி’ படத்தை அடுத்து அவர் ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு கன்னடம் மலையாள படங்களிலும் நடித்தார் என்பது வெப்சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அனைத்து படங்களிலும் அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கவிதா ராதேஷ்யம் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் அவர் மேலாடை மட்டுமே அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு யாருடனும் எந்த விதமான ரிலேஷன்ஷிப் இல்லை, எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ ஆகவில்லை. நான் இன்னும் 5 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வேன். ஆனால் கண்டிப்பாக என்னை விட வயது குறைவானவரைதான் திருமணம் செய்து கொள்வேன். எனவே என்னை பற்றி பரப்பும் வதந்தியை நிறுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments