மநீம -வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை கஸ்தூரி...! என்ன சொன்னார் தெரியுமா...?

 

மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து, கன்னியாகுமரி தொகுதியில் நடிகை கஸ்தூரி

பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பாக பி.டி. செல்வகுமார் களமிறங்குகிறார். அவரை ஆதரித்து நடிகை கஸ்தூரி அஞ்சுகிராமத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் பேசியிருப்பதாவது,


உங்கள் பகுதிக்காக செல்வகுமார் ஏராளமான நல்ல பணிகளை செய்துள்ளார். அவரை இழந்துவிடாமல் இருக்க, கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுங்கள். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர நீங்கள் முன் வர வேண்டும். மாறி மாறி நம் மாநிலத்தை திராவிட கட்சிகள் ஆண்டு வருகின்றன. நம் மாநிலத்தில் ஆளும் கட்சியினர் தொழில் அரசியல் பார்த்து வருகிறார்கள். ஆனால் உங்கள் தொகுதியில் நிற்பவர் சமூகத்திற்காக வேலை செய்பவர், அதனால் இவரை வெற்றியாளராக தேர்தெடுங்கள் என்று புகழந்து கூறி வாக்குகளை சேகரித்தார்.

தேர்தலுக்கு முன்பே, கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் நோக்கில் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தவர் செல்வகுமார். தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரியாமலே, இவர் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். இதில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினாரால், உங்களுக்கு என்னெவெல்லாம் செய்வார் என நீங்கள் யோசித்து பாருங்கள்.

திமுக சார்பாக ஆஸ்டின் என்பவர் தான் தற்போது எம்எல்ஏ- வாக உள்ளார். அவரை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, காரணம் அவர் தொகுதி பக்கமே வருவதில்லை. முதலில் தேமுதிக-வில் இருந்த அவர் தற்போது திமுகவிற்கு தாவியுள்ளார்.தேர்தல் முடிந்தவுடன் மநீம-த்துடன் இணைந்தாலும் இணைந்துவிடுவார்.

நான் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக கூட இல்லை, எனக்கும் அக்கட்சிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் இத்தொகுதியில் களமிறங்கும் செல்வகுமார் நேர்மையானவர் என்பதற்காக உங்களிடம் வாக்கு சேர்க்க வந்துள்ளேன். சமத்துவமாகவும், சகோதரத்துவமாகவும் இவர் உங்களிடம் நடந்து கொள்வார். இவரை நீங்கள் வேட்பாளராக தேர்ந்தெடுங்கள் என பிரச்சாரம் செய்தார் நடிகை கஸ்தூரி.