நடிகை கஸ்தூரி கர்ப்பமா? டுவிட் மற்றும் ஹேஷ்டேக்கால் ரசிகர்கள் குழப்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகை கஸ்தூரி திடீரென தான் கர்ப்பமாக இருப்பது போன்ற டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பதால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் .
நடிகை கஸ்தூரிக்கு கடந்த 2000ம் ஆண்டு திருமணமாகி ஏற்கனவே இரண்டு பெரிய குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக போன்ற இரண்டு புகைப்படங்களையும் #mrPREGNANT என்ற ஹேஷ்டேக்கை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
இன்று ஏப்ரல் 1 என்பதால் முட்டாள்கள் தின பதிவாக இருக்கலாம் என ஒரு சில கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நடிகை கஸ்தூரி, கர்ப்பிணி வேடத்தில் ஏதாவது திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கலாம் என்று கூறி வருகின்றனர் .
உண்மையில் கஸ்தூரியின் டுவிட்டிற்கும் ஹேஷ்டேக்கிற்கும் என்ன அர்த்தம் என்பதை அவரே விரைவில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
New beginnings... happy to share the news with all of you.
— Kasturi Shankar (@KasthuriShankar) April 1, 2022
Thank you all for the wishes.#mrPREGNANT pic.twitter.com/jIa66yBtNq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments