தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை: வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து கஸ்தூரி
- IndiaGlitz, [Friday,July 05 2019]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. ரூ.10 ஆயிரம் அபராதத்தை உடனே கட்டிய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தீர்ப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
திமுக-காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டியிடும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவின் உதவியால் எம்பி பதவி பெறவிருக்கும் வைகோ மீது இந்த தேசத்துரோக வழக்கை போட்டதே திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் என்பதை பல ஊடகங்கள் இதுகுறித்த செய்தியில் குறிப்பிடவில்லை. ஆனால் நடிகை கஸ்தூரி இதனை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2009 இல் ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மேல் தேசத்துரோக வழக்கு போட்டது யார் ? அன்றைய திமுக அரசு. இதை தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் தைரியமாக பதிவு செய்த கஸ்தூரி, 'எண்ணையை தடவிக்கிட்டு மணல்ல புரண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும் - பழமொழி. எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறது தான் கிட்டும். - புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் ! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே ! என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ்-திமுக தலைமையிலான இந்திய அரசு இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் உள்பட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொலையான நிலையில் ஈழத்தமிழருக்காக போராடுவதாக கூறிக்கொண்டிருக்கும் வைகோ, அதே கட்சிகளுடன் கூட்டணி வைத்தது மட்டுமின்றி அந்த கட்சியின் உதவியால் தற்போது எம்பியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
2009 இல் ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மேல் தேசத்துரோக வழக்கு போட்டது யார் ? அன்றைய திமுக அரசு . இதை தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 5, 2019