அஜித்தை எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? நடிகை கஸ்தூரியின் சர்ச்சை ட்விட்..!

  • IndiaGlitz, [Friday,August 18 2023]

’அஜித்தை எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்’ என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் துரைமுருகன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தொகுப்பாளர் அஜித், விஜய் படங்கள் எல்லாம் நீங்கள் பார்ப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் அஜித் என்றால் யார்? என்று கேட்டார்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் சர்ச்சைக்குரிய ஒரு ஹேஷ்டேக்கையும் இந்திய அளவில் டிரெண்டாக்கினர்.

ஆனால் உண்மையில் அமைச்சர் துரைமுருகன் அந்த பேட்டியில் ’அஜித்தின் என்றால் யார்? என்று கேட்டதற்கு அடுத்த நிமிடமே ’தல’ என்று கூறுவார்களே அவர் தானே என்று கூறுவார். ஆனால் இந்த வீடியோவை முழுமையாக பார்க்காமல் ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்த ஹேஷ்டேக் பார்த்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது: அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு... அவரையெல்லாம் எப்பிடி தெரியும்?

நடிகை கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் வழக்கம்போல் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.