தலைவியும் சுபவீக்களும் கள்ள மௌனம் காப்பது ஏன்? நடிகை கஸ்தூரி கேள்வி

  • IndiaGlitz, [Wednesday,June 02 2021]

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நிலையில் அந்த பள்ளியை மூட வேண்டும் என்றும், அந்த பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்றும், பள்ளியை அரசுடமையாக்க வேண்டும் என்றும் ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை கூறினார்கள்

இந்த நிலையில் பத்மா சேஷாத்திரி பள்ளியைப் போலவே சென்னையில் வேறு சில பள்ளிகளிலும் இதேபோன்ற பாலியல் குற்றச்சாட்டு நடந்த நிலையில் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பள்ளிகளை மூட வேண்டும் என்றும் யாருமே குரல் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

செட்டிநாடு பள்ளி, மகரிஷி, இன்னும் பல சென்னை பள்ளிகளில்  தொடர்  போஸ்கோ கைதுகள். துரிதமாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி. ஏன் இதை எந்த அமைச்சரும் பிரபலமும்  பாராட்டவில்லை, ஏன் எந்த மீடியாவும் பகிரங்கப்படுத்தவில்லை??   பத்ம சேஷாத்திரி பள்ளியை மூட வேண்டும் என்று கொக்கரித்த தலைவியும் சுபவீக்களும் திராவிடன் ஸ்டாக்குகளும்  இப்போது கள்ள மௌனம் காப்பது ஏன்? ஜாதி பாசமா? பண பேரமா இல்லை பயமா? ஒருவேளை இதுதான் பகுத்தறிவா? என்று பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த பதிவுக்கும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது.

More News

கணவரின் ஆசையை நிறைவேற்ற பிகினியுடன் பீச் சென்ற ஸ்ரேயா!

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக சூப்பர்ஸ்டார் உள்பட முக்கிய நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினியுடன் 'சிவாஜி' விக்ரமுடன் 'கந்தசாமி' விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்' தனுஷுடன்

உயிருக்குப் போராடிய அப்பா, தங்கை… ஒரு மணிநேரம் நீந்தியே காப்பாற்றிய 7 வயது ஹீரோ!

அமெரிக்காவில் போட்டிங்கின்போது ஆற்றில் சிக்கிக் கொண்ட தனது அப்பாவையும் தங்கையையும் 7 வயது சிறுவன் சேஸ் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம்

தமிழகத்தில் +12 தேர்வுகள் ரத்தா? முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தில் +12 பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

தந்தை பிறந்தநாள்… கிராம மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கி கொண்டாடிய  பிரபல நடிகர்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு, தனது தந்தையின் பிறந்த நாளை இலவச கொரோனா தடுப்பூசி வழங்கி கொண்டாடி இருக்கிறார்.

இசைஞானி இளையராஜா குறித்து நம்பவே முடியாத சில சுவாரசியத் தகவல்கள்!

ஒவ்வொரு கலைஞனும் தேசிய விருதுக்காக ஆண்டுக் கணக்கில் தவம் கிடக்கும்போது இசைஞானி