அசுர சாதனை செய்த தமிழக அரசை கிண்டல் செய்த தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று விளம்பரமும் செய்துவிட்டு மதுவையும் விற்பனை செய்து அரசு, இந்த ஆண்டு தீபாவளிக்கு மதுவிற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நாட்களில் அதாவது அக்டோபர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களில் மொத்தம் ரூ.455 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த சாதனை குறித்து நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது:

தமிழகம் - அசுர சாதனை!*

டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

25-10-2019 = 100cr 26-10-2019 = 183 cr 27-10-2019 = 172 cr ஆகமொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா !

கடந்த வருடம் 325 கோடி ரூபாய் விற்ற நிலையில் இந்த வருடம் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று சாதனை! என்று நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கிண்டலுடன் பதிவு செய்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More News

குழந்தை சுர்ஜித் நிலை குறித்து உள்ளூர்க்காரர் ஒருவரின் அதிர்ச்சி தகவல்

நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சூர்ஜித் இந்த குழந்தை, வெள்ளி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த குழந்தையை வெளியே எடுக்க மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர் 

ஏடிஎம் மிஷினை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: பெரும் பரபரப்பு 

இதுவரை ஏடிஎம் மிஷினை உடைத்து அதிலுள்ள பணத்தை மட்டுமே திருடர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் தற்போது ஏடிஎம் மிஷினையே தூக்கி சென்றுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது

ஆழ்துளைக் கிணறுகள் விவகாரம்: கமல், ரஜினி கருத்து 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீண்டு வரவேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை

ஈசிஆரில் இருந்து சென்னையை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்; தமிழ்நாடு வெதர்மேன்

ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன்

சுர்ஜித் மீட்பு விவகாரம்; முதல்வர், துணை முதல்வருக்கு போன் செய்த பிரதமர், லதா ரஜினி

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உள்ள நிலையில் அந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக