அசுர சாதனை செய்த தமிழக அரசை கிண்டல் செய்த தமிழ் நடிகை!
- IndiaGlitz, [Monday,October 28 2019]
குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று விளம்பரமும் செய்துவிட்டு மதுவையும் விற்பனை செய்து அரசு, இந்த ஆண்டு தீபாவளிக்கு மதுவிற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நாட்களில் அதாவது அக்டோபர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களில் மொத்தம் ரூ.455 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த சாதனை குறித்து நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது:
தமிழகம் - அசுர சாதனை!*
டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.
25-10-2019 = 100cr 26-10-2019 = 183 cr 27-10-2019 = 172 cr ஆகமொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா !
கடந்த வருடம் 325 கோடி ரூபாய் விற்ற நிலையில் இந்த வருடம் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று சாதனை! என்று நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கிண்டலுடன் பதிவு செய்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
*தமிழகம் - அசுர சாதனை!*
— Kasturi Shankar (@KasthuriShankar) October 28, 2019
டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.
25-10-2019 = 100cr 26-10-2019 = 183 cr 27-10-2019 = 172 cr ஆகமொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.??????
தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா ! ????#TASMAC