அடுத்தது எதை ஏத்த போறாங்களோ: நடிகை கஸ்தூரியின் டுவிட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக கருத்துக்களை தைரியமாக தெரிவித்து வருவார் என்பதும் அவரது டுவிட்டுகளுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் தன்னுடைய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சமீபத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது கழிவுநீர் கட்டணம் அதிகரித்துள்ளதை கஸ்தூரி தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஏற்கனவே சொத்து வரியை ஏத்துனாங்க
பால் பொருள் விலை பருப்பு விலை எல்லாம் ஏறியாச்சு .
மறுபடியும் electricity கட்டணம் ஏத்திட்டாங்க .
இப்போ water sewage கட்டணமும் ஏறிடுச்சு .
அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு BP ஏறுது! ‘ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு பெட்ரோல், கேஸ் உயர்வு குறித்து கஸ்தூரி எதுவும் பேசவில்லை என்பது போன்ற கமெண்ட்ஸ் வந்த நிலையில் அதற்கும் கஸ்தூரி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
Haha. தண்ணி வரி, சொத்துவரி ஏத்துனதுக்கு gas petrol ஒன்றியம் னு இங்கே உருட்டுற உபிக்களின் விசுவாசத்தை பாராட்டத்தான் வேண்டும்.
BTW, gas petrol விலையை கண்டித்த முதல் ஆள் நான் தான்.
நான் கட்சி சார்பாளர் இல்லை. மனசாட்சியுள்ள ஒரு தமிழ்க்குடிமகள்.
என்று நடிகை கஸ்தூரி பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே சொத்து வரியை ஏத்துனாங்க
— Kasturi Shankar (@KasthuriShankar) September 13, 2022
பால் பொருள் விலை பருப்பு விலை எல்லாம் ஏறியாச்சு .
மறுபடியும் electricity கட்டணம் ஏத்திட்டாங்க .
இப்போ water sewage கட்டணமும் ஏறிடுச்சு .
அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு BP ஏறுது! #expectMore#TheVidiyalArasu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments