தனக்கு வந்தாதான் தலைவலி தெரியும்: திமுக ஆட்சியை விமர்சனம் செய்த தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் இன்றுமுதல் இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதை விமர்சனம் செய்து தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
இன்று முதல் சென்னைக்குள் செல்வதற்கு இ-பதிவு நடைமுறை அவசியம் என தமிழக அரசு திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லாத பலர் சாலைகளில் வாகனங்களில் சென்று திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இ-பதிவு முறை குறித்து முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் மக்கள் மற்றும் காவல்துறை உள்பட அனைவரும் துன்பப்படுகிறார்கள். இது தேவையற்ற குழப்பம். முற்றிலும் தவிர்த்திருக்கலாம். எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக திடீரென அறிவித்த திட்டங்களை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது திமுகவும் அதையேதான் செய்துள்ளது. திடீர் சாம்பார் மாதிரி திடீர் சட்டம். தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி. ஆட்சிக்கு வந்தால்தான் ஆர்வக்கோளாறு தெரியும்’ என்று கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த ட்விட்டிற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை கமெண்ட்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
DMK in opposition flayed center & ADMK govt that they make rules without figuring out implementation. What has DMK done now? How to describe this sudden epass rule ? திடீர் சாம்பார் மாதிரி திடீர் சட்டம். தனக்கு வந்தாதான் தலைவலி தெரியும். ஆட்சிக்கு வந்தாதான் ஆர்வக்கோளாறு தெரியும்
— Kasturi Shankar (@KasthuriShankar) May 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments