பட்டுவாடா நடக்கையில் பார்க்காம போய்ட்டனே....! நடிகை கஸ்தூரி டுவீட்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளை தேர்தல் நடக்கையில் இன்று பணப்பட்டுவாடா நடப்பதை பார்க்காமல் போய்ட்டனே என்று நடிகை கஸ்தூரி டுவீட் போட்டுள்ளார்.
சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருபவர் நடிகை கஸ்தூரி. யாருக்கும் பயப்பாடாமல் தில்லாக பேசக்கூடிய ஒரு நபரும் கூட. விமர்சனங்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பார். இதனால் இத்தேர்தலில் அரசியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. திராவிடக் கழகங்களையும், பெரியார் கழகங்களையும் எதிர்த்து பேசி வருவதால், நெட்டிசன்களால் பாஜக -வின் "ஸ்லீப்பர் செல்" என்றும் அழைக்கப்படுவார்.
கமலுக்கு எதிராக பல விமர்சனங்களை செய்து வரும் கஸ்தூரி, இம்முறை மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் மநீம- சார்பாக களமிறங்கும் வேட்பாளர் பி.டி.செல்வகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, நான் கமல் கட்சியில் உறுப்பினராக கூட இல்லை, ஆனால் உங்கள் தொகுதியில் போட்டியிடும் செல்வகுமாரை ஆதரித்து பேச வந்துள்ளேன். இதற்கு காரணம் இவர் கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்தவர், தொகுதியை நன்றாக பார்த்துக்கொள்வார் என்பது தான். சாதிமதத்தை கடந்து மக்களின் நன்மதிப்பை பெற்ற இவருக்கு கஸ்தூரி பிரச்சாரம் செய்தது, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் கஸ்தூரி என்னால் ஓட்டுப்போட முடியாது என டுவிட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, "தவிர்க்க இயலாத சிக்கல்- ஊரில் இல்லை. வோட்டு போட முடியவில்லையே என்ற வருத்தத்தை விட காசு பட்டுவாடா நடக்கும் பொழுது காணாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அதிகமா இருக்கு ! Feeling left out!"என டுவிட் போட்டுள்ளார்.
தவிர்க்க இயலாத சிக்கல்- ஊரில் இல்லை. வோட்டு போட முடியவில்லையே என்ற வருத்தத்தை விட காசு பட்டுவாடா நடக்கும் பொழுது காணாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அதிகமா இருக்கு ! Feeling left out .??????
— Kasturi Shankar (@KasthuriShankar) April 4, 2021
This year they have paid all income groups! #ShameonUs #dravidianLegacy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments