பட்டுவாடா நடக்கையில் பார்க்காம போய்ட்டனே....! நடிகை கஸ்தூரி டுவீட்...!

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

நாளை தேர்தல் நடக்கையில் இன்று பணப்பட்டுவாடா நடப்பதை பார்க்காமல் போய்ட்டனே என்று நடிகை கஸ்தூரி டுவீட் போட்டுள்ளார்.

சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருபவர் நடிகை கஸ்தூரி. யாருக்கும் பயப்பாடாமல் தில்லாக பேசக்கூடிய ஒரு நபரும் கூட. விமர்சனங்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பார். இதனால் இத்தேர்தலில் அரசியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. திராவிடக் கழகங்களையும், பெரியார் கழகங்களையும் எதிர்த்து பேசி வருவதால், நெட்டிசன்களால் பாஜக -வின் ஸ்லீப்பர் செல் என்றும் அழைக்கப்படுவார்.

கமலுக்கு எதிராக பல விமர்சனங்களை செய்து வரும் கஸ்தூரி, இம்முறை மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் மநீம- சார்பாக களமிறங்கும் வேட்பாளர் பி.டி.செல்வகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, நான் கமல் கட்சியில் உறுப்பினராக கூட இல்லை, ஆனால் உங்கள் தொகுதியில் போட்டியிடும் செல்வகுமாரை ஆதரித்து பேச வந்துள்ளேன். இதற்கு காரணம் இவர் கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்தவர், தொகுதியை நன்றாக பார்த்துக்கொள்வார் என்பது தான். சாதிமதத்தை கடந்து மக்களின் நன்மதிப்பை பெற்ற இவருக்கு கஸ்தூரி பிரச்சாரம் செய்தது, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கஸ்தூரி என்னால் ஓட்டுப்போட முடியாது என டுவிட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, தவிர்க்க இயலாத சிக்கல்- ஊரில் இல்லை. வோட்டு போட முடியவில்லையே என்ற வருத்தத்தை விட காசு பட்டுவாடா நடக்கும் பொழுது காணாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அதிகமா இருக்கு ! Feeling left out!என டுவிட் போட்டுள்ளார்.


 

More News

அக்சயகுமாருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் படக்குழு

பிரபல பாலிவுட் நடிகரும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' என்ற திரைப்படத்தில் நடித்தவருமான அக்ஷய்குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

ஏப்ரல் 30 வரை திரையரங்குகளை மூட உத்தரவு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஏப்ரல் 30 வரை திரையரங்குகள், மால்கள் ஆகியவற்றை மூட மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

2 நாட்களுக்கு முன் ரிலீஸான தமிழ் படத்தின் தயாரிப்பாளருக்கு கொரோனா!

கடந்த வெள்ளியன்று ரிலீஸான தமிழ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

நயன்தாரா, த்ரிஷா பாணியில் ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் முதல் படம்!

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா மற்றும் த்ரிஷா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் அதிக படங்களில் நடித்து வருகின்றனர்

'கர்ணன்' ரிலீஸ் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.