கிரிக்கெட் மைதானத்தில் செம டான்ஸ் ஆடிய கஸ்தூரி: இதுதான் பிட்ச் ரிப்போர்ட்டா?

  • IndiaGlitz, [Saturday,July 30 2022]

கிரிக்கெட் மைதானத்தில் நடிகை கஸ்தூரி செம டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் தொகுப்பாளினியாக நடிகை கஸ்தூரி இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை கோவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டி மைதானத்தில் செம டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இதுதான் தனது ஸ்டைலில் உள்ள பிட்ச் ரிப்போர்ட் என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.