அது மட்டும் நடந்தால் விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்: நடிகை கஸ்தூரி

  • IndiaGlitz, [Sunday,December 08 2024]

திமுக கூட்டணி மைனஸ் ஆகும் என்று விஜய் சொன்னது மட்டும் நடந்தால் அவரது வாயில் சர்க்கரை போடுவேன் என்று நடிகை கஸ்தூரி சமீபத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கூட்டணி கணக்கு என்ற இருமாப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி மைனஸ் ஆகும் என்று கூறியதை அடுத்து நடிகை கஸ்தூரி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

2026 இல் திமுகவின் கூட்டணி கணக்கு மைனஸ் ஆகிவிடும் என்று விஜய் கூறியது உண்மையானால், அவரது வாயில் சர்க்கரை போடுவேன் என்று தெரிவித்தார்.

மேலும், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால், திருமாவளவன், ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவரும் இனிமேல் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒன்றாக இருப்பார்களா என்று சந்தேகம் தான் என்று அவர் அந்த பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சினிமா செய்திகளை பார்க்கவில்லை என்று கூறியது. அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பற்றி சொல்கிறார் என்று நான் நினைத்தேன். உதயநிதி அவர்கள் தரக்குறைவாக பேசுவது என்பது புதிது இல்லை. அவர் ஏற்கனவே இன்றைக்கு விஜய்யையும் ஆதவ் அர்ஜுனாவையும் சொல்லி இருக்கிறார். அவர் ஏற்கனவே சனாதனத்தை கூறினார். அதற்கு முன்னாடி ரஜினியை சொன்னார். அவர் அடிக்கடி சொல்வது தான். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.