விஜய்யால் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? நடிகை கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த சில மணி நேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் 2026 தான் தனது டார்கெட் என்று விஜய் கூறினாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விஜய்யை மையமாக வைத்த தமிழக அரசில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் எந்த பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கும் தவறை செய்ய மாட்டார் என்றும் சமூக ஆர்வலர்கள், தொண்டு உள்ளம் கொண்டவர்களுடன் மட்டுமே அவர் கைகோர்ப்பார் என்றும் கூறப்படுவது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியுள்ளார்.
தளபதி விஜய்யை வரவேற்கிறோம் என்று கூறியுள்ள அவர் ’ஒரு சரியான நேரத்தில் தமிழக அரசியலுக்கு விஜய் வருகிறார். இது அவருக்கு ஒரு சிறந்த நேரமாக இருக்கும். உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? சமீப கால வரலாற்றில் பல சூப்பர் ஸ்டார்கள் அரசியலுக்கு வந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே விஜய்யின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
Welcome Thalapathy Vijay.
— Kasturi (@KasthuriShankar) February 2, 2024
He comes into TN politics at a very interesting time. Perhaps the best time. Can he make a real difference?
In recent history, many superstars have disappointed in politics. Vijay's actions will be watched keenly. All the best #GOAT#தமிழகவெற்றிகழகம் pic.twitter.com/YT82qMKVlo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com