முதல் ஆளா நீங்கதான் களத்தில நிக்கணும், பயப்படாம வாங்க: ரஜினிக்கு கஸ்தூரி அழைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த கருத்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட தான் வைத்திருந்த சில திட்டங்களையும் அவர் விளக்கினார். அதுமட்டுமின்றி தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருந்து வழிகாட்டியாக இருக்கப் போவதாகவும் அறிவித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கூறியதாவது:

பிரஸ்மீட்டில் நீங்கள் பேசியது பெரும் ஏமாற்றமாக உள்ளது. அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்று சொல்வதற்கு பிரத்தியேகமாக ஒரு பிரஸ்மீட் தேவையா? என்பது எனக்கு புரியவில்லை. கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றாலும் சட்டசபைக்கு போக ஆசை இல்லை என்று நீங்கள் கூறியது என்னை பொறுத்தவரையில் ரொம்ப ஆச்சரியமாக உள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அதிமுக திமுகவுக்கு விழுந்த ஓட்டுக்கள் ஜெயலலிதா, கருணாநிதிக்கு விழுந்த ஆளுமைக்கான ஓட்டுக்கள் என்று நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள். அதேபோல் உங்களுடைய ஆளுமைக்குத்தான் ஓட்டு விழும். நீங்கள் கைகாட்டும் ஒருவருக்கு ஓட்டு விழும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கமுடியும்.

நீங்கள் இருக்கும்போது இன்னொருவரை கை காட்டுவது என்பது கண்டிப்பாக அரசியல் ஆர்வலர்களுக்கு உங்களுடைய ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருக்கும். அரசியல் கட்சி என்பதே தேர்தல் அரசியல் தானே. கட்சி ஆரம்பித்தால் நீங்கள் தான் முதல் ஆளாக களத்தில் நிற்க வேண்டும். நீங்கள் தான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். பயப்படாமல் நீங்கள் வாருங்கள் உங்களுக்கு பின்னால் தமிழ்நாடே இருக்கும். எல்லோரும் சேர்ந்து தமிழ்நாட்டை சுத்தப்படுத்தலாம். இதுதான் ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்’ என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
 

More News

கனடா பிரதமரின் மனைவியையும் விட்டு வைக்காத கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதையும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முக்கிய விவிஐபிக்களையும் விட்டுவைக்கவில்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே.

அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது: ரஜினி அரசியல் குறித்து வடிவேலு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

'நீ ஒரு பொறுக்கிடா? விஷாலை கடுமையாக விமர்சனம் செய்த மிஷ்கின்

'துப்பறிவாளன் 2' படத்தினால் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதும் பின்னர் அந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதும்,

எதுக்கு மீன் குழம்பு சட்டியை கழுவனும்? ரஜினிக்கு விசிக எம்பி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் செயல்பாடு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதில் ஒன்று சிஸ்டத்தை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால்

"மக்களே.. வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துவிட்டு நாட்டிலேயே இருங்கள்"..! பிரதமர் மோடி.

மக்கள் தேவையில்லாமல் அடிக்கடி வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்த்தால் வைரஸ் பரவுவதை தடுக்கலாம்