இதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும்: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து நடிகை கஸ்தூரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம் என்றும் ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு என்றும், குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக கூறி இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.
Thoughts on divorce : No matter how right it is for the parents, it is always wrong for the kids.
— Kasturi Shankar (@KasthuriShankar) January 18, 2022
Our seniors had it right. "Staying together for the sake of the kids" is really something. Once children come into the picture, gotta put family first.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments