நமது அரசியல்வாதிகளின் இதயம் பலவீனமானவை.. செந்தில் பாலாஜி கைது குறித்து தமிழ் நடிகை கிண்டல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நேற்று நள்ளிரவு திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைதுக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து தமிழ் நடிகை கஸ்தூரி கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார்? ரெய்டு போகும்போது அமலாக்க துறை மற்றும் வருமான துறை அதிகாரிகளோடு மருத்துவர்களும் அவசியம் செல்ல வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் வலுவில்லாத இதயங்களை கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு சிறைச்சாலையிலும் இதயத்திற்கு சிறப்பு சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
காவலர்கள் இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயிற்சி பெற வேண்டும். மேலும் போலீஸ் ஜீப்புக்கு பதிலாக கைது செய்த பின் ஆம்புலன்ஸ் பயன்படுத்தலாம் என்று செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து கூறியுள்ளார்.
வழக்கம் போல் கஸ்தூரியின் இந்த ட்விட்டிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments