கோலம், குறள், காபி: ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள் குறித்து தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Thursday,November 14 2019]

ஆவின் பால் பாக்கெட்டுக்களில் திருக்குறள் பிரிண்ட் செய்ய வேண்டுமென்று பாஜக பிரமுகர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து விரைவில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து ஆவின் பால் பாக்கெட்டுக்களில் திருக்குறள் பிரிண்ட் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது திருக்குறளோடு துவங்கும் . டிவி , FM ரேடியோவில் தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.

பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும், ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி குறள் வருவது நல்ல விஷயம்தான்.

கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது.

More News

வகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியை ஒருவரை சூழ்ந்த பள்ளி மாணவர்கள் அவரை நாற்காலிகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வெற்றிடம் இருப்பது உண்மைதான், ரஜினி அதனை நிரப்புவார்: முன்னாள் திமுக அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது 'தமிழகத்தில் ஆளுமையுள்ள, சரியான அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது

தலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பம்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தர்பார்'

கணவர் மீது புகார் அளித்த பிக்பாஸ் வின்னர்: போலீசார் அதிரடி நடவடிக்கை

பிக்பாஸ் இந்தி 4 நிகழ்ச்சியின் வின்னரும் நடிகையுமான ஸ்வேதா திவாரி, தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கொடுத்த புகாரின் அடிப்படிடையில்

ரஜினி, அஜித், விஜய், சூர்யா.... 'அசுரன்' வெற்றிக்கு பின் பிசியாகும் வெற்றிமாறன்

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் அபார வெற்றி இயக்குனர் வெற்றிமாறனை திரையுலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இந்த படம் குறித்து தன்னிடம் இரண்டு மணி நேரம் ஷாருக்கான் பேசியதாகவும்