டிக் டாக் தடை சரியா? நடிகை கஸ்தூரி கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக்டாக் செயலியை தடை செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரும் ஏப்ரல் 24க்குள் தீர்ப்பளித்து முடிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மதுரைக்கிளை நீதிமன்றம் பிறப்பித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் டிக்டாக் தடை குறித்து நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் நடிகை கஸ்தூரி பரபரப்பான கருத்து ஒன்றை கூறினார். அவர் பேசியதாவது:
இணையதளங்களில் சுமார் 800 ஆபாச தளங்களை தடை செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இந்த டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். ஏனெனில் ஆபாச தளங்களில் யார் வீட்டு பெண்களோ நடிக்கின்றார்கள். ஆனால் டிக்டாக் செயலியில் தங்கள் வீட்டு பெண்கள் நடிக்கின்றார்கள். தங்கள் வீட்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அடுத்த வீட்டு பெண்களை சுவரில் ஓட்டை போட்டு பார்ப்போம் என்று கூறுவது போல் இருக்கின்றது என்று கஸ்தூரி பேசினார்.
மேலும் டிக்டாக் செயலியில் பதிவான ஒருசில ஆபாசமான வீடியோக்களை மட்டுமே மதுரை ஐகோர்ட்டும் நாமும் பார்த்திருக்கின்றோம் என்றும், இந்த டிக்டாக் வீடியோவால் பலர் சினிமா வாய்ப்பை பெற்றுள்ளனர், பலர் தங்கள் நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர், ஏன், ஒரு கணித ஆசிரியை கணித பாடத்தை கூட டிக்டாக் செயலி மூலம் நடத்தினார். அந்த வீடியோவையெல்லாம் நாம் பார்ப்பதில்லை என்றும் கஸ்தூரி குற்றம் சாட்டினார்
கஸ்தூரியின் இந்த கருத்துக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆபாசம் அதிகம் இருப்பதாக தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் டிவி நிகழ்ச்சிகளைத்தான் தடை செய்ய வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments