முதல்ல மெட்ரோ வரட்டும், அப்புறம் புல்லட்டுக்கு போகலாம்: கஸ்தூரி
- IndiaGlitz, [Friday,September 15 2017]
உலகின் 15 நாடுகளில் புல்லட் ரயில் சேவை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இப்போதுதான் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அமைக்கப்படவுள்ள இந்த ரயில் திட்டத்திற்கு ரூ.1.10 லட்சம் கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த திட்டம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுகையில் 'சென்னையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. 2020ஆம் ஆண்டுக்குள்ளாவது முடியுமா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் 5 ஆண்டுக்குள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் வருதாம்' என்று கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.