30 வினாடிகள் பேசி 3 நாட்கள் பேச வைத்துவிட்டார் கமல்! பிரபல நடிகை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அந்த கூட்டத்தில் அவர் இந்து தீவிரவாதம் குறித்து பேசியது வெறும் 30 வினாடிகள். இந்த 30 வினாடிகள் பேச்சுதான் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகி, ஊடகங்கள் மட்டுமின்றி தற்போது நீதிமன்றமும் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த பேச்சுகுறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, 'கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே... பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க.... இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? நான் நினைக்கின்றேன் அவர் 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க' என்று கூறியுள்ளார்.

கஸ்தூரி கூறியபடி நான்கு தொகுதிகளிலும் அதிக வாக்குகளை கமல் பெறுவாரா? அல்லது தொடர்ந்து ஒரு மதத்தை மட்டுமே விமர்சிக்கும் கமலுக்கு பொதுமக்கள் பாடம் கற்பிப்பார்களா? என்பதை மே 23ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

இளசுகள் மத்தியில் ட்ரெண்டாகும் காக்ரோச் சேலஞ்ச்! 

தற்போதைய இளைஞர்கள் எதையும் மிகவும் வித்தியாசமாக செய்ய நினைக்கின்றனர்.  அந்த வகையில் சும்மா இருக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்து,

ரஜினி அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் 234ம் உறுதி: ஹிட் பட இயக்குனர் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா? அப்படியே ஆரம்பித்தாலும் கூட்டணி வைப்பாரா? அல்லது போட்டியிடுவாரா? போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டு வரும்

மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன மாமியார்! அதிர்ச்சியில் மருமகள் தற்கொலை

மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறும் மாமியாரே கூறியதால் அதிர்ச்சியில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரசிகர்களுக்கு வாட்சன் வெளியிட்ட வீடியோ!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்ற வெறியோடு விளையாடிய வாட்சன், முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்த நிலையிலும்

இரண்டையும் கண்டிக்கின்றேன்: கமலின் இந்து தீவிரவாதம் குறித்து பிரபல நடிகை!

கமல்ஹாசன் பேசிய இந்து தீவிரவாதம் குறித்த கருத்து கடந்த இரண்டு நாட்களாக உள்ளூர் ஊடகங்களில் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் விவாத பொருளாகியுள்ளது