கொஞ்சம் கருணை காட்டுங்க: போராட்டம் செய்யும் டாக்டர்களுக்கு நடிகை வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதியில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அரசு மருத்துவர் சங்க பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று பணிக்கு திரும்பாத மருத்துவர்களுக்கு பதிலாக மாற்று மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையையும் மீறி மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மருத்துவர்களின் இந்தப் போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: நீங்க மக்களை நோயாளியா பாக்குறீங்க. ஆனா, மக்கள் நாங்க உங்களை கண்ணுக்கு தெரிஞ்ச கடவுளா பாக்குறோம். உங்களுக்கு தொழில், எங்களுக்கு உயிர். உங்களுக்கு கோரிக்கை பிரச்சினை, மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினை. கொஞ்சம் கருணை காட்டுங்க. மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வர இறைவனை வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
நீங்க மக்களை நோயாளியா பாக்குறீங்க. ஆனா, மக்கள் நாங்க உங்களை கண்ணுக்கு தெரிஞ்ச கடவுளா பாக்குறோம். உங்களுக்கு தொழில், எங்களுக்கு உயிர். உங்களுக்கு கோரிக்கை பிரச்சினை, மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினை. கொஞ்சம் கருணை காட்டுங்க.
— Kasturi Shankar (@KasthuriShankar) October 31, 2019
Praying for some compromise in doctors strike.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com