தமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகை! அதிமுகவில் சேருவாரா?

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

கடந்த 90களில் பிரபலமாக இருந்த நடிகை கஸ்தூரி தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அதிரடி அரசியல் கருத்துக்களை கூறி வருவது தெரிந்ததே. குறிப்பாக கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அப்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறியது அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வரை நடிகை கஸ்தூரி சந்தித்துள்ளார். கஸ்தூரியின் சமூக சேவைகளை அறிந்த முதல்வர், கஸ்தூரியை அழைத்து பாராட்டியதாக கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை கடந்த 22 வருடங்களுக்கு முன் சந்தித்தை ஞாபகம் வைத்து முதல்வர் தன்னிடம் கூறியதாகவும், முதல்வரின் எளிமையை நேரில் கண்டு வியந்ததாகவும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பை வைத்து கஸ்தூரி அதிமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கஸ்தூரி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.