குஷ்புவை அடுத்து இளமைக்கு திரும்பும் கஸ்தூரி: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,September 29 2021]

நடிகை குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து 20 வருடங்களுக்கு முந்தைய குஷ்பு போல மாறியே ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தார் என்பதும் அவருடைய ஸ்லிம்மான லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஷ்புவை அடுத்து நடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1991ம் ஆண்டு ’ஆத்தா உன் கோவிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய நடிகை கஸ்தூரி, அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும், தற்போது அவர் ’தமிழரசன்’ ’உன் காதல் இருந்தால்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கஸ்தூரிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய கஸ்தூரி போல இளமையுடன் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்களின் பாசிட்டிவ் கமெண்டுகள் பதிவாகி வருகின்றன என்பதும் அவை இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.