உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம்! அஜித்துக்கு பிரபல நடிகை வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளத்தில் கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் மோதுவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் எல்லை மீறியபோது அஜித்துக்கும் அவரது மேனேஜருக்கும் சமூக வலைத்தளம் மூலமே நடிகை கஸ்தூரி புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்கள் அவரிடம் மோசமாக நடந்து கொண்டாலும் அஜித் மீது அவருக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித் பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துப்பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
50 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் 'தல' அஜித்குமார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். தமிழில் சினிமாவில் நிலையான வெற்றியை பெறுவது அனைவருக்கும் கைகூடுவதில்லை. அயராத உழைப்பு, அசராத தன்னம்பிக்கை, அத்துடன் கொஞ்சம் அதிர்ஷ்டம் இதுதான் அஜித்குமார். யாருக்கும் வாரிசு இல்லை. தானே படம் தயாரிக்கவில்லை. எந்த பின்புலமும் இல்லாமல், யாரின் பக்கபலமும் இல்லாமல் உழைப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து உச்சத்தை தொட்ட அஜித் குமார் பிறந்தது உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம்!
பொது வாழ்க்கையில் எப்படி ஒரு தலைமுறைக்கு உதாரணமாக திகழ்கிறாரோ, சொந்த வாழ்க்கையிலும் உதவும் மனப்பான்மைக்கும் நேர் கொண்ட பார்வைக்கும் முன்னுதாரணமாக உள்ளார். அவரின் அபிமானிகள் அவர் வழியில் அன்பாகவும் கண்ணியமாகவும் நடப்பதே அவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பரிசு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments