எம்ஜிஆர் லதாவை தடவுன மாதிரி..! கஸ்தூரி டுவீட்டுக்கு குவியும் கண்டனங்கள்

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்து டுவிட்டர் பயனாளிகளின் கண்டனத்தை பெற்று வருகிறார்.

இந்த போட்டியில் 109 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற எளிய இலக்கை நோக்கி நேற்று விளையாடியது. குறைவான இலக்காக இருந்தாலும் ஆரம்பத்திலேயே வாட்சன் விக்கெட் விழுந்துவிட்டது என்பதால் நிதானமாக விளையாடிய சென்னை அணியை ,'என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க' என்று நடிகை கஸ்தூரி பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு டுவிட்டர் பயனாளிகளும் சிஎஸ்கே ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் 'அமைதிப்படை அல்வா'வை குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கஸ்தூரியின் இந்த டுவீட் காமெடிக்காக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாகரீகமாக பதிவு செய்திருக்கலாம் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

More News

'அசுரன்' பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய ஆசிரியர்: கதறி அழுத மாணவர்கள்

சென்னை அருகே உள்ள நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையிலேயே ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பள்ளி மாணவ, மாணவியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் முதல்முறையாக ரோபோ அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை

ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

தமிழகத்தில் 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.