பஞ்சபாண்டவிகளுக்கு மத்தியில் பாலாஜி: கஸ்தூரியின் டுவீட்டுக்கு நெட்டிசன்கள் விளாசல்

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

பிக்பாஸ் வீட்டில் தற்போது யாஷிகா, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய ஐந்து பெண்களும் ஒரே ஆண் போட்டியாளராகிய பாலாஜியும் உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் கூட பாலாஜி கேமிரா முன் நின்று ஐந்து பெண்களுக்கு மத்தியில் பாலாஜி கண்ணியமாக இருப்பதை 64 கேமிராக்கள் மூலம் உலகிற்கு காட்டும் பிக்பாஸூக்கு நன்றி என்று பாலாஜி தெரிவித்தார். மேலும் பாலாஜி தங்களை மகள் மற்றும் சகோதரியாக நினைப்பதாக போட்டியாளர்களே பலமுறை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் இதுகுறித்து சர்ச்சைக்குரிய ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்,.

அத்தி பூத்தது போல
இன்னிக்கு #BiggBossTamil2 பார்த்தேன்.
விஜயலட்சுமி
யாஷிகா
ஐஸ்வர்யா
ரித்விகா
ஜனனி
and
பாலாஜி
அஞ்சு பொண்ணுங்களுக்கு நடுவுலே பாலாஜி மட்டும். கண்டிப்பா பஞ்ச பாண்டவிகளுக்கு மத்தியில சிக்கின ஒத்தை ஆம்பளைக்குத்தான் நல்ல சான்ஸ் ! என்று கஸ்தூரி டுவிட்டியுள்ளார்.

இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உங்கள் மகள் அந்த ஐந்து பேர்களில் ஒருவராக இருந்தால் இப்படி பேசுவீர்களா? என்றும் உங்கள் எண்ணம்போல் தான்  உங்கள் டுவீட்டும் இருக்கின்றது என்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.