அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை தர இருக்கும் நிலையில் அவரது முன்னிலையில் ஒரு சில பிரபலங்கள் பாஜகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: அமித்ஷா முன்னிலையில் நான் இன்று பாஜகவில் சேரப் போகிறேன் என்று தெரிவிக்கும் விதமாக எனது தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. வதந்திகள் யதார்த்ததைவிட எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் இது.
நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி நேற்று மாலை முருகனைச் சந்தித்தேன் என்பது உண்மைதான். ஆனால் நான் சந்தித்தது எல் முருகன் அல்ல, எனது குலதெய்வமான கடவுள் முருகன். நான் வேல் யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை. முருகனின் சூரசம்ஹார நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
அப்போ கட்சியில சேர்கிறேன் என்ற செய்தி? இந்த பொய் எங்கு உருவாக்கப்பட்டது என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு .... அரோகரா’ என்று நடிகை கஸ்தூரி பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து கஸ்தூரி பாஜகவில் சேரப்போவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.
My phone is ringing off the hook informing me that I am joining BJP today in presence of Amit Shah .
— Kasturi Shankar (@KasthuriShankar) November 21, 2020
Another example of how rumors are more powerful than reality.
Although I confess I spent all last evening with Chief Murugan. ??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments