கனிமொழியிடம் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்வி
- IndiaGlitz, [Saturday,July 13 2019]
கடந்த சில ஆண்டுகளாகவே மாடுகளை வைத்து அரசியல் செய்யும் நிலைமை நாடு முழுவதும் இருந்து வருகிறது. குறிப்பாக மாட்டுக்கறி சாப்பிடுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாகவும் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று பீப் சூப் குடிக்கும் புகைப்படம் ஒன்றை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இதனை கண்டு ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அந்த நபரின் வீட்டுக்கு சென்று பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கினர். தற்போது காயம் அடைந்த நபர் சீரியஸான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வன்முறையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாட்டுக்கறிக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் குவிந்தது. இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைத்தளத்தில், 'எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல' என்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். கனிமொழியின் இந்த கருத்துக்கு கமெண்ட் அளித்த நெட்டிசன்கள், 'அதேபோல் எந்த மொழியை கற்க வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் கற்பவர்கள் மட்டுமே நீங்களும் இல்லை உங்கள் கட்சியும் இல்லை? என்று பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கனிமொழியின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி, '60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை. எனக்கு தெரிந்த சில மதங்களில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி அவர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை. எனக்கு தெரிந்த சில மதங்களில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி அவர்கள்? https://t.co/Rmza8nz6sv
— Kasturi Shankar (@KasthuriShankar) July 13, 2019