வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க.... நடிகை கஸ்தூரி ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரி தனது வீட்டின் அருகே மழை நீர் தேங்கி இருப்பதாகவும் எங்கேயுமே தண்ணீர் தேங்கவில்லை என்று சொல்லித் தெரிகிற வெட்கங்கெட்ட அமைச்சர்கள், டிவி ஊடகம் யாராவது அகப்பட்டீங்க.... என்று ஆவேசத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வடகிழக்கு பருவமழை ஒரு பக்கம் தொடங்கி விட்டதாக இந்திய மாநில ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை போட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஒரு சில ஊடகங்கள் மற்றும் அமைச்சர்கள் சென்னையில் எங்கேயும் மழை நீர் தயங்கவில்லை என்று கூறிவரும் நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது பக்கத்தில் கூறி இருப்பதாவது:
எங்க ஏரியா. இப்போ.
வீட்டுக்குள்ள தண்ணி வேகமா புகுந்துக்கிட்டு வருது.
முன்கூட்டி எச்சரிச்சதுனால கொஞ்சம் prepare ஆயிட்டோம், ஆனாலும் damage தான்.
எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க....
#ChennaiRainsUpdate
— Kasturi (@KasthuriShankar) October 15, 2024
எங்க ஏரியா. இப்போ.
வீட்டுக்குள்ள தண்ணி வேகமா புகுந்துக்கிட்டு வருது.
முன்கூட்டி எச்சரிச்சதுனால கொஞ்சம் prepare ஆயிட்டோம், ஆனாலும் damage தான்.
எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க.... https://t.co/IwVDeNPh8B
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com