10 லட்ச ரூபாய் சம்பாதிக்க உழைக்க தேவையில்லை.. கள்ளச்சாராயம் குடித்தால் போதும்: கஸ்தூரி

  • IndiaGlitz, [Friday,June 21 2024]

10 லட்ச ரூபாய் சம்பாதிக்க கஷ்டப்பட்டு உழைக்க தேவையில்லை, கள்ளச்சாராயம் குடித்தால் போதும் என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 50 தாண்டி உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கள்ளச்சாராய மரணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அவர் கிண்டல் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

10 லட்சம். விளையாட்டு வீரருக்கா? போரில் உயிர் நீத்தவருக்கா? விஞ்ஞானிக்கோ விவசாயிக்கோவா? குடும்பத்தை கைவிட்டு கள்ளசாராயத்தை குடித்து செத்தவருக்கு. இந்த கேடு கெட்ட dravidamodel லில் பத்து லட்சம் சம்பாதிக்க உண்மையா உழைக்க தேவையில்லை. மொடா குடிகாரனா இருந்தா போதும்.

இதை எப்படி எடுத்து கொள்வது? விற்ற பொருளில் complaint வந்ததால் நஷ்ட ஈடு போலவா? மக்களின் வாயை அடைக்கவா? வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ஒரு கம்பனி கொடுக்கும் கவர்ச்சிகரமான scheme என்றா? அப்படி என்ன திமுக அரசுக்கும் விஷச்சாராய கம்பனிக்கும் தொடர்பு?