ஜெயா டிவி ரெய்டு நடக்கும்ன்னு நினைச்சேன்: நடிகை கஸ்தூரி

  • IndiaGlitz, [Thursday,November 09 2017]

கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து தனது பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருபவர் நடிகை கஸ்தூரி. கமல், ரஜினி அரசியல் முதல் அதிமுக திமுக அரசியல் வரை தனது கருத்துக்களை காரசாரமாக டுவிட்டரிலும், பேட்டிகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் கூறி வருகிறார்

இந்த நிலையில் இன்று காலை முதல் ஜெயா டிவி உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து தனது டுவிட்டரில் கஸ்தூரி கூறிய கருத்து இதுதான்: மோடி கலைஞர் வீட்டுக்குள்ள நுழைஞ்சப்பவே நினைச்சேன்... ஐடி ஆபிஸருங்க ஜெயா டிவிக்குள்ள நுழைவாங்கன்னு' என்று கூறினார். மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நான் எதிர்பார்க்கின்றேன்' என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு பதில் கூறியுள்ள ஒரு டுவிட்டர் பயனாளி, 'உங்கள் வீட்டுக்கு ஐடி ரெய்டு வந்தால் என்ன நடக்கும்? என்று கேட்க அதற்கு கஸ்தூரி, 'என் வீட்டில் ஐடி ரெய்டு முடிந்த பின்னர் ஐடி ஆபீசர்கள் எனக்கு நன்கொடை கொடுத்துவிட்டு செல்வார்கள்' என்று நகைச்சுவையாக பதில் கூறியுள்ளார்.

More News

ஜெயலலிதா இருந்திருந்தால் ரெய்டுக்கு வந்திருப்பார்களா? சி.ஆர்.சரஸ்வதி

நாடு முழுவதிலும் உள்ள சசிகலா குடும்பத்தினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இன்று காலை முதல் வருமான வரித்துறை அலுவலகர்களால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நடனக்கலைஞர்களுக்கு தளபதி விஜய் கொடுத்த நன்கொடை

தளபதி விஜய் ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு பின்னரும் ஒரு குறிப்பிட்ட தொகை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு நன்கொடை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து பதிலடி கொடுப்போம்:  டிடிவி தினகரன்

இன்று காலை முதல்  ஜெயா டிவி உள்பட சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் சற்றுமுன்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னைக்கு யுனெஸ்கோவால் கிடைத்த பெருமை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு சென்னையை கிரியேட்டிங் சிட்டீஸ் என்று கூறப்படும் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

2018-ல் எத்தனை நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் 2018ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்களை அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.