ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை: காவிரி குறித்து கஸ்தூரி எழுதிய கவிதை

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவரது துணிச்சலான பேட்டிகள் பெரும் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நேற்று காவிரி பிரச்சனை குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த இறுதி தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவிதை எழுதியுள்ளார். இந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது:

கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று .
கட்டெறும்பும் தேய்ந்து குற்றுயிராயிற்று .
மண்டைப் பிளக்கும் வெயிலில் உழுபவன்
தொண்டை நனைக்க நீர்க்கு அழுபவன்
சண்டை போட்டாலும் சந்தியில் நின்றாலும்
கெண்டைக்கால் பற்றி கெஞ்சியே கேட்டாலும்
அண்டை மாநிலத்தார் மனதில் நீரில்லை…
அண்டிப்பிழைக்கும் ஈனமினி தேவையில்லை.

ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை - ஆனால்
காற்றும் மழையும் கொடுக்கும்.
வேண்டும் வளத்தை அளிக்கும்.
ஆண்டவன் அளப்பதையேனும் காத்திடுவோம்.
கள்ளுக்கும் குடுவைக்கும்
காவிரியை இழக்காமல்
மண்ணுக்கு ஆசைப்பட்டு
பெண்ணை சீரழிக்காமல்
நீருயர நெல்லுயுர
நீதியுடன் நாம் நடப்போம்.

More News

பிப்ரவரி 21ஆம் தேதி கமல்ஹாசனின் முழு சுற்றுப்பயண விபரங்கள்:

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியை தொடங்கி முதல் அரசியல் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரது சுற்றுப்பயண முழுவிபரங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சிவகுமாரின் மகாபார சொற்பொழிவு எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது தெரியுமா?

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தியின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவகுமார் என்பவர் நடிகர் மட்டுமின்றி சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே.

சந்தானம் தனது பாணியை மாற்றி கொள்வது நல்லது: காமெடி நடிகர் ஜார்ஜ்

கடந்த பல வருடங்களாக காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் ஜார்ஜ். குறிப்பாக தெய்வத்திருமகள், ஆம்பள, கலகலப்பு, கலகலப்பு 2 உள்பட பல படங்களில் அவரது சிறப்பான நடிப்பு வெளிப்பட்டுள்ளது.

கமல்-நல்லக்கண்ணு சந்திப்பில் நடந்தது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் இன்று கமல்ஹாசனின் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து இருதரப்பினர்களும் மரியாதை நிமித்த சந்திப்பு என்று தெரிவித்தனர்.

கமல்ஹாசனை சந்திக்கின்றார் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கவுள்ள நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.