பீச் என்ன பிரஸ்மீட் வைக்கும் லொகேஷனா? கஸ்தூரி
- IndiaGlitz, [Friday,August 17 2018]
மெரீனா பீச் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்பதுதான். ஆனால் அதற்கு அடுத்ததாக ஞாபகம் வருவது அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிதான். தமிழகத்தின் பிற பகுதியில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள் இந்த இரண்டு சமாதிகளையும் பார்க்காமல் செல்வதில்லை
இந்த நிலையில் தற்போது அதே மெரீனாவில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி சமாதியும் இணைந்துவிட்டது. அதுமட்டுமின்றி மெரீனா பீச் என்பது அரசியல்வாதிகளின் அரசியல் செய்யும் களமாகவும் மாறிவிட்டது. பல அரசியல் தலைவர்கள் மெரீனாவில் தியானம் செய்வதும் பிரஸ் மீட் வைப்பதுமாக உள்ளனர். இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, 'கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை அனைவரும் பார்த்து கொண்டு தானே இருக்கின்றோம். தமிழ்நாடு என்னவோ தகப்பன் சொத்து மாதிரி ஆளாளுக்கு அடித்து கொள்கின்றனர். பீச் என்பது தியானம் செய்வதற்கும், தர்மயுத்தம் செய்வதற்கும், பிரஸ்மீட் வைப்பதற்குமான ஒரு லொகேஷன் மாதிரி ஆகிவிட்டது.
60 ஆண்டுகால திராவிட அரசியலில் ஒருபக்கம் சாதி, பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலும், இன்னொரு பக்கம் லஞ்சம், ஊழல் மற்றும் வெறுப்பு அரசியலும்தான் இருந்திருக்கின்றது. இதை நான் சொல்லவில்லை. அவர்களே ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டி கொள்கின்றனர். இப்போதுதான் ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்திருப்பதாக நான் கருதுகிறேன்' என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.