ஓட்டுக்கு ஐயாயிரம், நீட்டுக்கு ஆயிரமா? நடிகை கஸ்தூரி காட்டம்

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 தருவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, 'ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுக்கும் அரசியல்வாதிகள் நீட்டுக்கு ரூ.1000 கொடுப்பதா? என வறுத்தெடுத்துள்ளார். இவரது டுவீட்டுக்கு பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழக மாணவர்களின் இந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்யாமல் ரூ.1000 கொடுத்து உதவி செய்யும் தமிழக அரசியல்வாதிகளை விமர்சிப்பது ஏன்? என்றும் ஒருசிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து உடனே நடிகை கஸ்தூரி சி.பி.எஸ்.இ மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசையும் கண்டித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'காலா' இசை வெளியீடு நடைபெறும் இடம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிக்கரம்

தமிழக மாணவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களை சி.பி.எஸ்.இ. அமைத்து பழிவாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கு, நீட் தேர்வு எழுத இடமில்லையா? பிரபல இயக்குனர் ஆவேசம்

இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் அதுவும் ராஜஸ்தான் போன்ற தொலைதூர மாநிலங்களில் நீட் தேர்வு மையத்தை சி.பிஎஸ்.இ. அமைத்துள்ளது

ரயில் கழிவறை நீரை டீயில் கலந்த விவகாரம்: ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

ரயில் கழிப்பறையில் உள்ள தண்ணீரை தேநீர் தயாரிக்க எடுத்த டீ விற்பனையாளர் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நீட்டிற்காக செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ் சங்கம்

மருத்துவ படிப்பு படிக்கவிருக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது.