அப்பாவை என்னமாய் மாற்றிவிட்டார் கன்னிகா ரவி.. க்யூட் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கன்னிகா ரவி தனது அப்பாவை இளமையாக மாற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
நடிகை கன்னிகா ரவி கடந்த ஆண்டு கவிஞர் சினேகனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தை உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடத்தி வைத்தனர் என்பதும் தெரிந்தது.
திருமணத்திற்கு பின்னர் சினேகன் மற்றும் கன்னிகா ரவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் ஜாலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் சமீபத்தில் கூட தங்களது மாடு கன்றுக்குட்டி ஈன்றதை வீடியோவாக பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கன்னிகா ரவி தனது அப்பாவை இளமையாக மாற்றும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது அப்பாவின் நரை முடிக்கு டை அடித்து உள்ளார். முதலில் அப்பா முடியாது என்று கூற அதனை அடுத்து கன்னிகா ரவியும் அவருடைய அம்மாவும் சேர்ந்து கட்டாயப்படுத்தியதை அடுத்து கன்னிகா ரவியின் அப்பா தலைக்கு டை அடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் இளமையான தோற்றத்தில் இருக்கும் வீடியோவை கன்னிகா ரவி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் க்யூட்டான இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்த வீடியோவின் கேப்ஷனாக கன்னிகா ரவி, ‘அப்பா ரவிக்குமார் அம்மா தமிழ்ச்செல்வி அப்பா சேட்டை கொஞ்சம் ஓவராத்தான் போகுது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் எங்கள் அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com