close
Choose your channels

மாலத்தீவு கடலில் மீன் போல் நீந்தும் கனிகா.. உடன் இருப்பவர் யார் தெரியுமா?

Friday, May 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வரலாறு’ உள்பட சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த நடிகை கனிகா, சமீபத்தில் மாலத்தீவு சென்ற நிலையில் அங்கிருந்து அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை கனிகா கடலுக்குள் மீன் போல் நீந்தும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

அஜித் நடித்த ’வரலாறு’, சேரன் நடித்து இயக்கிய ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்த கனிகா, சமீபத்தில் வெளியான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் அவர் ‘எதிர்நீச்சல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியலில் அவரது கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நடிகை கனிகா மாலத்தீவு சென்றுள்ள நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் நீச்சல் உடை உள்பட கிளாமர் காஸ்ட்யூமில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் கடலுக்குள் தனது மகனுடன் நீந்தும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர், ‘தண்ணீருக்கு அடியில் வாழ்க்கை மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. இன்று காலை என் மகனுடன் நான் தண்ணீருக்குள் சென்றபோது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் கடலுக்கு அடியில் பல மீட்டர்கள் ஆழத்தில் சென்ற போது அந்த அழகை பார்த்து அனுபவித்தேன், இந்த அழகான காட்சியை என் கண்களால் பார்த்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment