ஆதி குணசேகரனுக்கு தெரிஞ்சா? 40 வயது நடிகையின் நீச்சல் உடை வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Thursday,May 25 2023]

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருக்கும் நடிகை கனிகா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் தாறுமாறான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா. அதைத் தொடர்ந்து சேரனின் இயக்கத்தில் ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்திலும் நடிகர் அஜித்துடன் இணைந்து ‘வரலாறு’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றார். அதேபோல தெலுங்கு, மலையாள மொழி சினிமாக்களிலும் விமர்சன ரீதியான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிக சிறந்த வரவேற்பை பெற்ற இவர் சமீபத்தில் வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

நடிப்பைத் தவிர டப்பிங்கிலும் நடிகை கனிகா கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது சன் டீவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ எனும் சீரியலில் நடித்து வருகிறார். இதில் பிற்போக்குத் தனமாகவும் ஆணாதிக்கத்தோடும் சிந்திக்கும் ஆதிகுணசேகரன் எனும் கதாபாத்திரத்திற்கு மனைவியாக ஈஸ்வரி எனும் கேரக்டரில் நடித்துவருகிறார். குடும்ப பாங்கான இந்தக் கதாபாத்திரம் அமைதியாகவும் அழுத்தமாகவும் காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை கனிகா குடும்பத்தோடு மாலத்தீவிற்கு சென்றுள்ள நிலையில் நீச்சல் உடையணிந்து எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஈஸ்வரி இதெல்லாம்? ஒருவேளை ஆதி குணசேகரன் மட்டும் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று கமெண்ட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை கனிகா தொடர்ந்து சமூகவலை தளங்களில் ஆக்டிவாகவே இருந்து வரும் நிலையில் அவ்வபோது நீச்சல் உடை அணிந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் ஆதிகுணசேகரனுக்கு மட்டும் தெரிந்தால் என்னவாகும் தெரியுமா? என்று எதிர்நீச்சல் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிப் லைனில் சாகச பயணம் செய்த சூரி.. ஹீரோக்கள் கூட இதை செய்வார்களா? வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான  சூரி   தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் முக்கிய வேடத்தில் நடித்த 'விடுதலை' திரைப்படம் மிகப்பெரிய

நேர்ல போய் கத்தி இருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது: தோனி என்ட்ரி குறித்து அருண்ராஜா காமராஜ்..!

சமீபத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் தல தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது பின்னணியில் ஒலித்த பாடல்

இயக்குனராகிறார் கீர்த்தி சுரேஷ் சகோதரி.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

 நடிகை கீர்த்தி சுரேஷ் சகோதரி இயக்குனராகி இருப்பதை அடுத்து அது குறித்த போஸ்டர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த கார்த்தி படம்.. 3 படங்கள் மோதலா?

 ஏற்கனவே தீபாவளி தினத்தன்று இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ஆக கார்த்தி படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது

கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோவா? மாஸ் வீடியோ வைரல்..!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ