நடிகை கனிகாவுக்கு என்ன ஆச்சு? முகமெல்லாம் தீக்காயம்.. அவரே கொடுத்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Saturday,September 07 2024]

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் தீக்காயம் உள்ள புகைப்படங்களை பதிவு செய்து அதற்கு விளக்கம் கொடுத்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

’பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் அஜித்தின் ’வரலாறு’ சேரனின் ’ஆட்டோகிராப்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. சமீபத்தில் சன் டிவியில் முடிவடைந்த ’எதிர்நீச்சல்’ சீரியலில் முக்கிய கேரக்டரில் கனிகா நடித்திருந்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்திலும் கனிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவர் நடித்தது கடைசி வரை வெளியே தெரியாமல் சஸ்பென்சுடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் மோகன் மனைவியாக கனிகா நடித்திருந்த நிலையில், கதையே இவரது கேரக்டரின் மரணத்தை வைத்து தான் நகரும் என்பதும் இவரது மரணம் காரணமாகத்தான் மோகன், விஜய்யை பழி வாங்குவார் என்பதால் இவருடைய கேரக்டர் தான் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டர் என்றாலும் தனது மனதுக்கு திருப்தியான கேரக்டர் என்றும் இதற்காக தான் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றும் நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் கனிகா, ‘கோட்’ திரைப்படத்தின் கேரக்டர் குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.