'வரலாறு' நடிகை கனிகாவின் லேட்டஸ்ட்  புகைப்படங்கள்: குவியும் லைக்ஸ்

  • IndiaGlitz, [Saturday,June 12 2021]

அஜித் நடித்த ’வரலாறு’ சேரன் நடித்த ’ஆட்டோகிராப்’ மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை கனிகா.

நடிகை கனிகா கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்த பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார் என்றாலும் சமூக வலைதளங்களில் அவர் ஆக்டிவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு 7 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது 38 வயதாகும் கனிகா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கனிகாவின் கிளாமரை பார்க்கும்போது மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வருவார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். ஏற்கனவே அவர் தமிழில் தற்போது விக்ரம் நடித்து வரும் ’கோப்ரா’ விஜய் சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஓரிரு மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.