ஆக்சிஜன் குறித்த போலி செய்தி: பிரபல நடிகையின் டுவிட்டர் பக்கம் முடக்கம்!

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

தமிழ் ஹிந்தி உள்பட பல மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் கடந்த சில நாட்களாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் ஆக்சிஜன் குறித்து அவர் சமீபத்தில் பதிவு செய்த ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து டுவிட்டர் இந்தியா நிர்வாகம் அவரது கணக்கை முடக்கி உள்ளது. நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்சிஜன் குறித்து போலி செய்திகளை பரப்பியதால் டுவிட்டர் நிறுவனம் அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

More News

முட்டாள்தனமான வாதம்: நெட்டிசனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ப்ரியா பவானிசங்கர்!

தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை ப்ரியா பவானிசங்கர் டுவீட்டுக்கு முட்டாள்தனமான வாதம் என நெட்டிசன் ஒருவர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை காப்பாற்ற விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை காப்பாற்றுவதற்காக விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த நடிகர் ஒருவர் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

'த்ரிஷ்யம் 2' ரீமேக் குறித்த அதிகாரபூர்வ தகவல்: நடிகர், நடிகையர் யார் யார்?

மோகன்லால், மீனா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது என்பதும் ஓடிடியில் வெளியான போதிலும் இந்த படம் நல்ல வசூலை வாரி குவித்தது

தமிழ் நடிகை வீட்டில் நடந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

அஜித் நடித்த 'ஏகன்' ஜீவா நடித்த 'கோ' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகையின் சகோதரர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை தெரியுமா? கேளுங்கள் ஆடியோ வடிவில்!

தமிழர்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கை, தட்பவெட்ப நிலையையும் அதன் மாற்றங்களையும் கூட புனித தேவதைகளாகத்தான் புரிந்து கொள்கின்றனர்.