கோமாளிகள், சோம்பேறிகள், முட்டாள்கள்: கோவிலுக்கு சென்ற இளம் பெண்களை திட்டிய கங்கனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரைகுறை ஆடையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்களின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத், ‘சோம்பேறிகள், முட்டாள்கள் என திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் என்பதும் இவர் தமிழில் ’தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் தற்போது ’சந்திரமுகி 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, சில சமயம் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்து வருவார் என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு சர்ச்சைக்குரிய பதிவால் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு மீண்டும் அவருடைய கணக்கு மீட்கப்பட்டது.
இந்த நிலையில் கோவில் ஒன்றில் படு கவர்ச்சியாக இளம் பெண்கள் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்த புகைப்படத்தை ஒருவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்தை ரீட்விட் செய்த கங்கனா, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
‘அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு எப்படி பெண்கள் வரலாம்? என கேள்வி எழுப்பி கங்கனா, ‘ஒருமுறை தான் வாடிகான் சர்ச்சுக்கு ஷார்ட்ஸ் அணிந்து சென்ற போது தன்னை வளாகத்தில் உள்ளே விடவில்லை என்றும் அதன் பிறகு தான் ஹோட்டலுக்கு சென்று உடை மாற்றி விட்டு வந்தேன் என்றும் அதே போல் இங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் கோவிலுக்குள் இரவு ஆடைகளை அணிந்து வரும் கோமாளிகள், சோம்பேறிகள் மற்றும் முட்டாள்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
These are western clothes, invented and promoted by white people, I was once at the Vatican wearing shorts and t shirt, I wasn’t even allowed in the premises, I had to go back to my hotel and change…. These clowns who wear night dresses like they are casuals are nothing but lazy… https://t.co/EtPssi3ZZj
— Kangana Ranaut (@KanganaTeam) May 26, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments