மாநில அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் கொடுத்த பிரபல நடிகை: பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிர அரசுக்கும் பிரபல நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருவது தெரிந்ததே. மகாராஷ்டிரா மாநில அரசை கங்கனா கடுமையாக விமர்சனம் செய்ததாகவும் இதனை அடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதாகவும் வெளி வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் திடீரென நடிகை கங்கனா ரணவத் மகாராஷ்டிர மாநில கவர்னர் மாளிகைக்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் மகாராஷ்டிரா மாநில அரசு தனக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கவர்னரிடம் அவர் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில கவர்னர் மாளிகைக்கு கங்கனா ரனாவத் கார் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கங்கனாவின் புகாரை ஏற்றுக் கொண்டு மகாராஷ்டிரா கவர்னர் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
A short while ago I met His Excellency the Governor of Maharashtra Shri Bhagat Singh Koshyari Ji. I explained my point of view to him and also requested that justice be given to me it will restore faith of common citizen and particularly daughters in the system. pic.twitter.com/oCNByhvNOT
— Kangana Ranaut (@KanganaTeam) September 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments