close
Choose your channels

15 வருடத்திற்கு முன் இருந்த அதே கவர்ச்சி: ஜெயம் ரவி பட நாயகிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Sunday, February 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

15 வருடங்களுக்கு முன் ஜெயம்ரவியுடன் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்த நிலையில் அவருடைய அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் சரண் இயக்கிய திரைப்படம் ’இதயதிருடன்’. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை காம்னா. அதன்பிறகு ’மச்சக்காரன்’ ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார்

இந்த நிலையில் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரு தொழிலதிபர் ஒருவரை காம்னா திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை காம்னா தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 15 வருடங்களுக்கு முன் ’இதய திருடன்’ படத்தில் பார்த்தது போல் அப்படியே கவர்ச்சியாக இருக்கிறார் என்றும், அவருடைய இளமையின் ரகசியம் என்ன? என்று கமெண்ட்ஸ்களாக பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment