அசுர வளர்ச்சியில் “மாநாடு“ பட நடிகை… 2 மாதங்களில் 4 மெகா படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதிகளின் வாரிசான கல்யாணி பிரியதர்ஷன் தற்போது வளர்ந்துவரும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவருகிறார். இவர் 2 மாதங்களில் 4 மெகா திரைப்படங்களில் நடித்து அசுர வேகத்தில் முன்னேறி வருவதைப் பார்த்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2017 இல் “ஹலோ’‘ எனும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் மற்றும் தென்னிந்திய சர்வதேச விருதுகளைப் பெற்றிருந்தார். பின்னர் தமிழில் 2019இல் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “ஹலோ“ திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்திலும் ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு“ திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். நவம்பர் 26இல் வெளியான இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. பின்னர் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியான பிரம்மாண்ட திரைப்படமான “மரக்கர்“ திரைப்படத்திலும் இவர் இடம்பெற்றிருந்தார்.
அதையடுத்து ஜனவரி 21ஆம் தேதி வெளியான “ஹிருதயம்“ திரைப்படத்தில் நடிகர் பிரணவ் மோகன்லாலுக்கு இவர் ஜோடியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த மாதம் 24ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியான “ப்ரோ டாடி“ திரைப்படத்திலும் இவர் நடிகர் பிருத்விராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதிலும் கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு பாராட்டைப் பெற்றிருக்கிறது.
தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து “வான்“ திரைப்படத்தில் நடிக்கவும் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் அசுரவளர்ச்சி அடைந்துவரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com