நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகுகிறாரா? பரபரப்பாக பேசப்படும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து ரசிகர்களிடையே ஏராளமான வரவேற்பை பெற்றுவரும் நடிகை காஜல் அகர்வால் ஒரு முக்கிய காரணத்திற்காக சினிமாவை விட்டு விலக இருக்கிறார் என்பதுபோன்ற தகவல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2007 இல் தெலுங்கில் வெளியான ‘மகதீரா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து ‘சிரஞ்சீவி, பவண் கல்யாண், ராம் சரண், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் பொதினேனி என்று அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து தமிழில் ‘பழனி’ திரைப்படத்தில் அறிமுகமான அவர் ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘ஜில்லா’, ‘மாரி’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ என்று பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2020 இல் பிரபல தொழிலதிபர் கௌதம் கிட்சிலுவை காதலித்து திருமணம் கொண்ட இந்தத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் அதற்கு நீல் கிட்சிலு என பெயர் வைத்ததும் ரசிகர்கள் அறிந்ததுதான்.
தற்போது திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூடவே நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘பகவந்த் கேசரி’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த இரு திரைப்படங்களிலும் நடித்து முடித்தபிறகு நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலகுவதாக தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காரணம் தன்னுடைய செல்ல குழந்தை நீல் கிட்சிலுவிற்கு தற்போது ஒரு வயதான நிலையில் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காகவும் நடிகை காஜல் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் ஊடகங்களில் தகவல் கூறப்படுகிறது.
ஆனால் நடிகை காஜல் சினிமாவை விட்டு விலகுவது குறித்து அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் இரு படங்களின் படப்பிடிப்பு முடிந்தபின்பு அறிவிப்பு வெளியாகும் என்பதுபோன்ற தகவலும் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் ரசிகர்கள் பலரும் இப்போதே சோகத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com